விசிக பிரமுகர் கொலை! பதற்றம்!
கு.அசோக்,
வேலூர் அரியூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரமுகர் கொலை!
வேலூர்மாவட்டம்,அரியூர் அருகேயுள்ள ஆவாரம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் சரத்குமார் (34) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.
இவர் அரியூரில் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளா ர் பின்னர் இரவு இவர் வீடு திரும்பவில்லை இதனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடி வந்த போது டாஸ்மாக் கடை அருகில் சிறிது தொலைவில் கவிழ்ந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர், ஆனால் சரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அரியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணையை துவங்கினர்
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரோ மதுக்கடையில் அவரை 4 பேர் தாக்கியதாகவும் அவர்கள் தான் தலையில் அடித்து அவரை கொலை செய்ததாக புகார் அளித்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பதட்ட நிலை காணப்படுகிறது.

admin
