பார்வை அற்றோரை முட்டிய காளை! வேடிக்கை பார்த்த போலீஸ்!

பார்வை அற்றோரை முட்டிய காளை! வேடிக்கை பார்த்த போலீஸ்!

ஜி.கே.சேகரன்,

வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவில் இருந்து தவறி 4 கிலோ மீட்டருக்கு மேலாக  நெடுஞ்சாலையில் ஓடிய காளை பார்வையற்ற தம்பதியினர் மீது முட்டியதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வன்னியபுதூர் பகுதியில் எருதுவிடும் விழா நடைப்பெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள்  பங்கேற்ற நிலையில் அதில் பங்கேற்ற காளை ஒன்று வழி தவறி 4 கிலோ மீட்டர் தூரம்  வாணியம்பாடியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய து.

  அப்பொழுது பெருமாள் கூட்டு சாலையில் காளை ஓடி வந்த போது, அச்சாலையில் நடந்து சென்ற பார்வையற்ற தம்பதியினர் மீது காளை முட்டியது.

   இதில்  நாகராஜ் மற்றும் அவரது மனைவி  இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை மீட்டு முதலுதவி அளித்து, இருவரையும் சிகிச்சையிற்காக  வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

   எருதுவிடும் விழாவில் பங்கேற்ற காளை வழித்தவறி 4 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாலையில் நடந்துச்சென்ற பார்வையற்ற தம்பதியினர் மீது காளை மோதியதில் இருவர் படுகாயம் அடைந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விதிகளை பின்பற்றுகிறார்களா விழா குழுவினர் என கண்காணிப்பது போலீசார் பணி அல்லவா?