ஏம்பா ஆபிசர்… விபத்து ஏற்பட்டால் தான் உடைந்த கம்பத்தை மாத்துவீங்களா?
ஜி.கே.சேகரன்,
எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ள மின்கம்பம்! கட்டுக் கம்பியால் கட்டி வைத்திருக்கும் அவலம்! சரி செய்யாமல் மெத்தனம் காட்டும் மின் ஊழியர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் எலக்ட்ரானிக் கடை, போட்டோ ஸ்டூடியோ உள்ளிட்ட கடைகள் போன்றவை செயல்பட்டு வருகிறது.
தினமும் அந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் புட்டுக்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் கூட அவர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. அந்த மின்கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது. அதன் காரணமாக அந்த மின்கம்பத்தை கட்டு கம்பியால் கட்டி வைத்த அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் கூட அப்பகுதியில் இருக்கும் கடைக்காரர்கள் மின்வாரிய அலுவலகத்தில் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என மனு அளித்து வருகின்றனர்.
ஆனால் அதனை மின் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அந்த பகுதி தெருவிளக்குகளில் விளக்கும் எரிவதில்லை அதன் காரணமாக அப்பகுதியில் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் கடைகளின் முன்பு அமர்ந்து மது அருந்தும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறும் மிகவும் ஆபத்தான முறையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதியின் கடைக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏங்க பொதுமக்களே உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை, விபத்து அல்லது பலி என்று அசம்பாவிதம் நடந்து மேலதிகாரிகள் ஒரு காட்டு காட்டினால் தான் நடவடிக்கை எடுப்பாங்க. இது தானே வழக்கம் தானே. வெயிட் பண்ணுங்க...?

admin
