குளம் ஆக்கிரமிப்பு! விவசாயிகள் தவிப்பு! ஆளுங்கட்சிக்காரரின் அராஜகம்!

குளம் ஆக்கிரமிப்பு! விவசாயிகள் தவிப்பு! ஆளுங்கட்சிக்காரரின் அராஜகம்!

கு.அசோக்,

 ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா, திமிரி ஊராட்சி ஒன்றியம், வரகூர் பட்டினம் இடுகாட்டிற்கு செல்லும் வழியில் காவனூர், ஆனைமல்லூர், ஆரணி எல்லைகளை ஒன்றிணைக்கும் பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட சூரம்மா குளம் உள்ளது.(இருந்தது).

  கடந்த மூன்று தலைமுறைகளாக விவசாயத்திற்கும், கால்நடை குடிநீருக்கும் பயன்படுத்தி வந்த குளத்தை   வேதராஜபுரம் திமுக கிளை செயலாளரும், ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான அருள் தேவன் 1 ஏக்கர் குளத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

  இதனால் விவசாயிகள் பயன்படுத்தி வந்த குளக்கரை பொது வழிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாயமாக இருந்து வந்த குளம் தற்போது மண் தூர்த்தப்பட்டுள்ளது. கால்நடைகள் தண்ணீர் இன்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  அந்த குளத்தை ஆக்கிரமித்ததால் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் நீர் செல்லும் கால்வாய் வழியையும் பட்டா செய்து கொண்டு வேலி அமைப்பதாக கூறி விவசாயிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.