ரூ.5 லட்சம் வரையில் பணம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்!வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை!
ஜி.குலசேகரன்,
தேர்தல் ஆணையம் ரூ.5 லட்சம் வரையில் பணம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை - வாக்கு வாக்கு பணம் வாங்க கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு செய்ய உள்ளோம் -வேலூரில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி.
திருவாரூரில் மே 5-ம் தேதி நடத்தவுள்ள வணிகர்களின் விழிப்புணர்வு மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் வேலூரில் நடந்தது இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்கபேரமைப்பு மண்டலதலைவர் ஞானவேல்,பொருளாளர் அருண்பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
பின்னர் விக்கிரம ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் மே 5-ம் தேதி திருவாரூரில் வணிகர் விழிப்புணர்வு மாநாட்டை நடத்தவுள்ளோம், சாமானிய வணிகத்தை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் சிறப்பு சட்டத்தை இயக்க வேண்டும்.
நகராட்சி கடைகள் அரசாணை 480 திரும்ப பெற வேண்டும், கட்டிட வரி விதிப்பு அதிகமாக உள்ளது, அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
உலகம் முழுவதும் போர் சூழல் அமெரிக்கா போரால் கேஸ் சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டு சாமானியர்கள் டீக்கடை நடத்த முடியாத நிலையில் முதல்வர் 2 யூனிட் மின்சாரம் மாணியம் மற்றும் மின் அடுப்புகள் வாங்க 25 சதவிகிதம் மாணியம் அறிவித்துள்ளார்.
இதனை வரவேற்கிறோம் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் உள் அன்புடன் மகிழ்ச்சியை தெரிவித்துகொள்கிறோம்.
எரி பொருள் இல்லை என அச்சப்பட வேண்டாம் முண்டியடிக்க வேண்டாம் மொத்தமாக வாங்கினால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும்.
முதலமைச்சர் கோரிக்கை மனு வாங்கினார் எதிர்க்கட்சியும் கோரிக்கை மனு வாங்கினார்கள் இவர்கள் எங்கள் மனுவை பரிசீலனை செய்து தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என சொல்லியிருக்கிறார்கள்.
அதற்காக நாங்கள் வணிகர்கள் ஆட்சிமன்ற குழுவை கூட்டி முடிவு எடுப்போம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெள்ளிகிழமை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளோம்.
குறைந்தபட்சம் ஐந்து லட்சமாவது வணிகர்கள் பணம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.
வங்கி எடுத்து செல்லும் பணத்தை எடுக்க கூடாது பொருட்களை பறிமுதல் செய்தால் வணிகர்களை அலைகழிக்க கூடாது. ஆவணங்களை காட்டியவுடன் பொருட்களை திருப்பி தர வேண்டும்.
100 சதவிகிதம் வாக்களிக்க வணிகர் சங்க பேரமைப்பு எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதையும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். வணிகர் கடைகள் காலியானதற்கு காரணம் வெளிமாநில சூப்பர் மார்கெட்டுகள் தான் வரிவிதிப்புகள் குறித்து ஆய்வு செய்யபட வேண்டும் என சொன்னார்.

admin
