தமிழகத்தில் ஆட்சி மாற்றம்! மம்தா மீண்டும் முதல்வர்... மேட்ரிக்ஸ் ஐ.ஏ.என்.எஸ்.கருத்துக் கணிப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்! மம்தா மீண்டும் முதல்வர்... மேட்ரிக்ஸ் ஐ.ஏ.என்.எஸ்.கருத்துக் கணிப்பு!

ம.பா.கெஜராஜ்,

 தமிழக அரசின் களம் குறித்து மேட்ரிக்ஸ் ஐ.ஏ.என்.எஸ்  நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் திமுக கூட்டணியை பின்னுக்கு தள்ளி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 இடங்களில் இந்திய 114 முதல் 127 இடங்களையும் திமுக 104 முதல் 114 இடங்களையும், விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 6 முதல் 12 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

 அதே போல் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாலாவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் என்று மேட்ரிக்ஸ் ஐ.எ.என்.எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் 185 முதல் 170 பாஜக 100 முதல் 115 மஜ்லிஸ் 6 முதல் 12 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று கணிக்கப்பட்டாலும் இம்முறை திரிணமூல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதே போல் அசாமில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் இருந்து ஆட்சி தக்க வைக்க வாய்ப்புள்ளதாகவும் கேரளாவில் இடது முன்னணி காங்கிரஸ் கூட்டணியை இடுப்பு எடுப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.