நிருபர் என்ற போர்வையில் அடாவடி.... ஆசிட் வீச்சு மிரட்டலில் சிறையில் அடைப்பு -ஐபணி நீக்கம!
ம.பா.கெஜராஜ்,
ஒரு ஓகாலை நாளிதழ் நிருபரின் அடாவடி செயலால் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,அவரை அந்த நிர்வாகம் அதிரடியாக பணி நீக்கம். செய்திருக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம் மேல்பட்டி அடுத்த செண்டத்தூர் கிராமம் சரவணன் மனைவி கல்யாணி என்கிற மோனிஷா.
இவர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து அது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
மோனிஷா அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது,
தற்போது கணவருடன் ஆம்பூர் சௌராஷ்ட்ராபுரம் என்ற இடத்தில் வசித்து வருகிறேன்.
கடந்த 2024 ஆம் ஆண்டு கணவர் சென்னையில் வேலை செய்து வந்தபோது குடியாத்தம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த போது குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவருடைய மகன் ஏடிகே என்கிற தினேஷ்குமார் உறவினர் என்று அறிமுகமாகி நட்பாக பழகி வந்தார்
அவ்வப்போது அவருக்கு சிறிது சிறிதாக பணம் கொடுத்து வந்தேன். அப்படி இருக்க நான் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாவுக்கு விண்ணப்பித்து இருந்தேன்.
இதனை தெரிந்து கொண்ட தினேஷ்குமார் வீட்டுமனை பட்டாவை வாங்கி தருகிறேன் என கூறி 2 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு வீட்டுமனை பட்டா கீழ்ப்பட்டி கிராமத்தில் அரசால் வழங்கப்பட்டது. அதன் பின் அந்த இடத்தை அளப்பதற்காக சர்வேயர் அழைக்க பணம் கட்டி காத்திருந்ததை தெரிந்து கொண்ட தினேஷ்குமார் அவருக்கு தெரிந்த முருகன்,அருண்குமார்,தனகாந்தி என்ற சர்வேர்களை அழைத்து வந்து கடந்த 17ஆம் தேதி நிலத்தை அளந்தார்கள்.
இவர்கள் பற்றி குடியாத்தம் தாலுகா ஆபீசில் விசாரித்த போது இவர்கள் போலியான சர்வேர்கள் என்பதை பின்னர் நான் தெரிந்து கொண்டேன்.
நிலம் அளந்ததற்கான பணம் ஐந்தாயிரம் தருமாறு கேட்டதற்கு பணம் தர முடியாது என மறுத்து விட்டேன்.
மேற்படி இலவச வீட்டுமனை பட்டா வாங்கிக் கொடுக்க தினேஷ்குமார் எந்த வேலையும் செய்யவில்லை என்பதை தெரிந்து கொண்ட நான் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டேன்.
அதற்கு அவர் தனக்கு பிடிஓ மற்றும் அரசு அதிகாரிகளை தெரியும் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி காலம் கடத்தி வந்தார்.
இந்நிலையில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் ஆம்பூர் செல்வதற்காக காத்திருந்தபோது அங்கு வந்த தினேஷ்குமார் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.
உனக்கு அரசு இலவசமாக கொடுத்த பட்டாவின் மதிப்பு பல லட்சம் என்றும் அந்த பணத்தை எனக்கு கொடு அல்லது வீட்டுமனையை எனது பெயருக்கு எழுதிவை என்றும் அப்போது என்னை கேவலமாக பேசியும் ஆபாசமாக பேசியும் அவனது ஸ்கூட்டர் சாவியால் எனது தோள்பட்டையில் குத்தி துன்புறுத்தினார்.
மேலும் உனது முகத்தில் ஆசிட் அடித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்த கொடுமைகளை உயிருக்கு பயந்து பொறுத்துக் கொண்டிருந்தேன் தற்போது எனது கணவரையும் லாரி ஏற்றி கொலை செய்து விடுவதாகவும் என்னை ஆசிட் வீசி கொலை செய்வதாகவும் மிரட்டி உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்.
இவ்வாறு அந்த புகாரியில் தெரிவித்துள்ளார் மோனிஷா.
புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பரண்டு சுரேஷ் மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் நான்கு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்தனர்.
கணவர் அளித்த இன்னொரு புகார்.
அதேபோல் மோனிஷாவின் கணவர் சரவணன் வயது 34 அளித்த புகாரில் தான் வழக்கறிஞர் குமஸ்தாகவாக வேலை செய்து வருவதாகவும் எனது மனைவி மோனிஷா என்கிற கல்யாணிக்கு தினேஷ்குமார் என்பவர் தூரத்து உறவினர்.
அரசு வழங்கும் வீட்டுமனை பட்டா கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.
இதனை பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிலர் நிலம் அளந்ததற்கான பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் 18 ஆம் தேதி காலை குடியாத்தம் மேல்பட்டி ரோடு பவளக்காரதெரு செல்லும் வழியில் தினேஷ்குமார் எனது இருசக்கர வாகனத்தில் வரும் போது வழி மடக்கி ஆபாசமாக திட்டி எனது பாக்கெட்டில் கையை விட்டு 2 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு பணம் கேட்டால் தரமாட்டாயா உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என விரட்டியதாக அதில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரிலும் குடியாத்தம் டவுன் போலீசார் 4 சட்ட பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையை தொடர்ந்து ஏடிகே என்கிற தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைவரே வணக்கம் இவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் காலை நாளிதழில் நிருபராக பணியாற்றி வந்தவர்.
தற்போது இவர் இப்படி ப்பட்ட குற்றவியல் செயல்களில் ஈடுபட்டார் என வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை பத்திரிகை நிர்வாகம் பணி நீக்கம் செய்திருக்கிறது.
இவரை போலவே ஏகப்பட்ட பேர் செய்தியாளர்கள் என்கின்ற போர்வையில் சமூக சீர்கேடு விஷயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவற்றையெல்லாம் மாவட்ட பிஆர்ஓ,ஆட்சியர் மற்றும் காவல் துறை நிர்வாகம் கண்காணிக்கணும், கணக்கெடுக்கணும்.
மேலும் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டு பல பேர் ஏமாற்றி பணம் பறித்து கொண்டு இருக்கிறார்கள். மாவட்ட போலீஸ் சிஐடி போலீஸ் பட்டியல் எடுக்க வேண்டும்.
இதெல்லாம் கண்காணிச்சு முற்றுப்புள்ளி வச்சா உண்மையான பத்திரிகையாளர்களுக்கு கௌரவம் நிலைக்கும்.
அதேபோல் ஒரு சில பத்திரிகை நிர்வாகங்களில் தலைமைக்கு புகார்கள் வரும் பொழுது சம்பந்தப்பட்ட நிருபர்களை கூப்பிட்டு அட்ஜஸ்ட் செய்யாமல் அவர்களை உடனடியாக விசாரித்து பணி நீக்கம் செய்வது நல்ல நிர்வாகத்திற்கு அழகு.

admin
