காலிஸ்தான் தலைவர் கொலை எதிரொலி! இந்திய தூதரை வெளிற்றிய கனடா!!!

ம.பா.கெஜராஜ்,
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் கனடா நாட்டில் அதிக அளவில் உள்ளனர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவிக்கப்பட்ட போதிலும், அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், கனடாவின் குடிமகனாகவும் இருந்துள்ளார். சுர்ரே நகர குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது.
கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை சம்பவத்தில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது என பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார். கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த தாக்குதல்களில் காலிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. அப்படியிருக்க கனடாவில் இந்து கோவில்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோக்களும் வெளியானது.
இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன என கூறினார்.
கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலையில் அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.