பெண் போலீசார் உட்பட 91 போலீசாரை தாக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு! 16 ஆண்டுகள் சிறை தண்டனை... 161 பேர் விடுதலை!
ம.பா.கெஜராஜ்,
G.Kulasekaran,
பெண் போலீசார் உட்பட 91 போலீசாரை ஓட ஓட தாக்கியதுடன் ரூ 25 லட்சம் பொது சொத்துக்களை சூறையாடிய வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 22 பேருக்கு தண்டனை...161 பேர் விடுதலை செய்தும் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார்.
22 பேருக்கு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு! படுக்காயம் அடைந்த ஆண் காவலர் பெண் காவலர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு கோர்ட் உத்தரவு!நஷ்ட ஈடு தொகையை முன்னாள் எம்எல்ஏ அஸ்லாம் பாஷா சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு!15 பேர் அபராதம் செலுத்தி வீடு திரும்பிய நிலையில் 7 பேர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்..
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாகுச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர் பள்ளி கொண்டாவில் தோல் பதனி டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக பழனி பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக 2015-ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷமீல்அகமது (26) என்பவரை பள்ளி கொண்டா போலீஸ் இன்ஸ் பெக்டராக இருந்த மார்ட் டின் பிரேம்ராஜ் விசார ணைக்காக அழைத்துச்சென்றார். போலீஸ்நிலையத்தில் வைத்து ஷமீல்அகமதுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக ஷமீல் அகமது ஆம்பூர் அரசு மருத் துவமனையிலும், அங்கிருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அதன்பிறகு மேல் சிகிச்சைக் காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி 2015-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி ஷமீல் அகமது உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆம்பூரில் போது பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஆம்பூர் டவுன் போலீஸ்நிலையத்தை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். ஷமில்அகமதுவை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண் டும் என வலியுறுத்தி அவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் ஓ அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
பின்னர், இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சபாரத்தினம், போலீசார் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டது.
பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஷமில்அகமது மரணத்துக்கு காரணமான போலீசாரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வந்த பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் - மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சில் பயணித்த பயணிகள் பலர் காயம டைந்தனர். லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு டிரைவர்கள் தாக்கப்பட்டதால் போராட்டம் கலவரமாக மாறியது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்ட போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.அப்போது, கலவரக்காரர்கள் சிலர் போலிசாரை நோக்கி கற்களை வீசி எதிர்தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி செந்தில்குமாரி மீது கற்கள் வீசப்பட்டதால் அவர் படுகாயமடைந்தார். (இவரது திறமையின்மை காரணத்தினால் தான் போராட்டம் கலவரமாக மாறியது என்று அப்போது ஒரு கருத்து நிலவியது. இது குறித்த செய்தி தனியாக வெளியிடப்படும்)

பின்னர் அங்கிருந்து அவர் எஸ்கேப் ஆன நிலையில் அப்போதைய கலெக்டர் நந்தகோபால் ஸ்பாட்டுக்கு வராமலேயே வேறு வழியாக அவரும் எஸ்கேப் ஆனார்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதில் 15 பெண் போலீசார் உள்பட 91 பேர் படுகாயமடைந்தனர். 55 போலீசார் படுகாயமடைந்தனர். பெண் போலீசாரை காப்பாற்றிய விஜயகுமார் என்கிற போலீஸ் கலவரக்காரர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இந்த கலவரத்தால் 30-- க்கும் மேற்பட்ட அரசு மற்றும் - தனியார் பஸ்கள், லாரிகள், 7 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 4. மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இரவு 8 மணிக்கு தொடங்கிய கலவரம் நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. தொடர்ந்து நிலைமை லமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
191 பேர் மீது வழக்கு
இதில் 191 பேர் மீது போலீசார் 12 பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிந்து 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேலூர், கடலூர், சேலம் ஆகிய சிறைகளில் அடைத்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு திமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் 22 பேர் குற்றவாளி; மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷா சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 6 வழக்குகளில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 7-வது வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
7 கட்டமாக பதியப்பட்ட வழக்குகளில் 6 கட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 161 (இறப்பு உட்பட) பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதல் பிரிவில் 26 பேர், 2-வது பிரிவில் 35 பேர், 3-வது பிரிவில் 34 பேர் உட்பட 161 விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கலவரத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார். பாஷாவின் சொத்துகளை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடுசெய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் 2 பேருக்கு 14 ஆண்டுகள், 6 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், கலவரத்தின் போது பெண் காவலர்களை காத்து கலவரக்காரர்களால் பாதிக்கப்பட்டு தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் தலைமை காவல் விஜயகுமாருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை முன்னிட்டு ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணிகளை சரக டிஜஜி தர்மராஜன் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் எஸ்.பி.சியாமளாதேவி மற்றும் வேலூர் எஸ்.பி.மயில்வாகனம் ஆகியோர் மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி இன்று தீர்ப்பு அளித்தார். அதில் 6 கட்டங்களாக 106 பேர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ததாக விடுதலை செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 22 பேர் குற்றவாளி என தீர்ப்பு அளித்தார்.

அதில் முதல் குற்றவாளி பைரோஸ் அகமது முது 6 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
2வது குற்றவாளி ஆம்பூர் முன்னாள் எம்எல்ஏ அஸ்லம் பாஷா இறந்துவிட்டார். 3வது குற்றவாளி முனீருக்கு 16 ஆண்டுகள் சிறையும்.
4 வது குற்றவாளி இர்ஷாத் அஹமத், 5 வது குற்றவாளி முகமது பயாசன், 22 வது குற்றவாளி பைசூர் அஹமத் ஆகிய 3 பேருக்கும்.6 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 வது குற்றவாளி அத்திக் அஹமத் என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும்,
7 வது குற்றவாளி முகமது அப்சல், 11 குற்றவாளி அமானுல்லா, 12வது குற்றவாளி, பயாஸ் அஹமத், 13வது குற்றவாளி சஜித் அஹமத், 14வது குற்றவாளி, முகமது இஸ்மாயில், 15வது குற்றவாளி சுஹேல் அஹமத், 16வது குற்றவாளி சிக்கந்தர், 19வது குற்றவாளி கெனியுல்லா 22வது குற்றவாளி பைசூர் அகமது ஆகிய 9 பேருக்கு தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 8வது குற்றவாளி நவீத் அஹமத், பாட்ஷா, 9வது குற்றவாளி அயாஸ் பாஷா ஆகிய 2 பேருக்கும் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10வது குற்றவாளி ஜான் பாஷா என்பவருக்கு16 ஆண்டுகள் சிறை தண்டனையும்.17வது குற்றவாளி இக்பால் அகமது, 18வது குற்றவாளி இம்ரான், 21வது குற்றவாளி சமியுல்லா உள்ளிட்ட 3 பேருக்கும் 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20வது குற்றவாளி தபரீசுக்கு 9 ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையும்
என 22 பேருக்கு சிறை தண்டனை அறிவித்து மாவட்ட நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து இந்த வழக்கில் கலவர கும்பலால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த போலீஸ் விஜயகுமார் என்பவருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு மற்றும் பெண் போலீஸ் ராஜலட்சுமி என்பவருக்கும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சாட்சிகள் 10 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சாட்சிகளுக்கு இழப்பீட்டை மாவட்ட எஸ்பி சியாமளாதேவி தமிழக அரசிடம் ஒரு மாத காலத்திற்குள் பெற்று தர வேண்டும்.
மேற்படி இழப்பீட்டை தொகையை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செலுத்திய பின்னர் இறந்த முன்னாள் எம்எல்ஏ அஸ்லாம் பாஷாவிடம் இருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மொத்தம் 22 பேருக்கும் ரூ. 4 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வழக்கில் அதிக தண்டனை பெற்ற ஏழு பேரை மட்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் மேலும் மற்ற 15 பேர் அபராதம் செலுத்தினர் அதனை தொடர்ந்து அந்த 15 பேரும் இதன் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என வீடு திரும்பினர்
குறிப்பு:- இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீசாரில் பலர் 2015 கலவரத்தின் போது சிக்கியவர்கள். அவர்களில் சிலர் இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் கடமையாற்றினர்.

admin
