நடிக்க கூப்பிடவே ரஜினியை சந்தித்தாராம் சசிகலா!

நடிக்க கூப்பிடவே ரஜினியை சந்தித்தாராம் சசிகலா!

  சு.அபிஷேக்,

  அரசியல்வாதியான சசிகலா, அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்ட நடிகர் ரஜினிகாந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்தார்.

 இந்த சந்திப்பு நடந்து முடிந்து மறுதினம் தான் இது பற்றின செய்தி வெளியானது.

 அப்படி வெளியான செய்தியில் அரசியல் வாசம் பயங்கர தூக்கலாக இருந்தது, ரஜினியை அரசியல் பாயிண்டாக மையப்படுத்தி அவரவர் எண்ணம் போல் எழுதி தள்ளினார்கள். 

 இந்த சூழலில், தங்களின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்குமாறு, நடிகர் ரஜினிகாந்திடம் சசிகலா கோரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்தக் காரணத்திற்காகவே அவரை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது எப்படியிருக்கு..!?