அமைச்சர் துரைமுருகனிடம் மேயர் சுஜதாவை குறித்து பொதுமக்கள் புகார்!
கு.அசோக்,
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர், இது மேயர் தொகுதி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் என போட்டுக் கொடுத்ததால் முகம் மாறிய மேயர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் சேண்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமினை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேயர் சுஜாதா ஆகியோர் ஆய்வு செய்ய வந்த போது முள்ளிப்பாளையம் பகுதி மக்கள் அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் அதிகாரிகளிடம்பல முறை புகார் கூறியும் செய்யவில்லை என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கிருந்த ஆட்சியர் நானே வந்து நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அப்போதும் மக்கள் கேள்வி கேட்டு முற்றுகையை தொடர்ந்தனர். அமைச்சரிடம் மேயரை நேரடியாக போட்டுக் கொடுத்து தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர். அதாவது இது மேயரின் வார்டுங்க, அவர் எந்த நலப்பணிகளையும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதனால் மேயர் சுஜதாவின் முகம் மாறியது. அது சரி முறையாக மக்கள் குறைகளை களைந்திருந்தால் ஏன் அமைச்சரிடம் போட்டுக் கொடுக்கப் போகிறார்கள்.
சொந்த தொகுதி மக்களே அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது.

admin
