டுயூட்டி டாக்டர் மீது நடவடிக்கை கோரி ஆர்பாட்டம்!கருப்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டதால் பரபரப்பு!
ஜி.கே.சேகரன்,
அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த டாக்டரின் அலட்சியப் போக்கால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மனைவி தனலட்சுமி. அவர் நிறைமாத கர்ப்பிணையாக இருந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
எனவே அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தனலட்சுமியை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு குழந்தை நன்றாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
பின்னர் திடீரென குழந்தையின் உடலுக்கு ஆபத்து உள்ளது எனவே தர்மபுரிக்கு செல்லுங்கள் என மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

உடனடியாக தனலட்சுமி தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தையை மீட்டு உள்ளனர்.
இதனால் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் உறவினர்களிடம் குழந்தையை தர்மபுரி மருத்துவர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்பாட்டம் செய்தனர்.
17ஆம் தேதி பணியிலிருந்த இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண் சிசு உயிரிழந்ததற்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கூறியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாவகமாக பேசி அவர்களை வழியனுப்பிவைத்தனர்.

admin
