பலான குற்றம் புரிந்த பெருசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

பலான குற்றம் புரிந்த பெருசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு  20 ஆண்டுகள் சிறை தண்டனை  மற்றும் ரூ.50,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

 திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன்(57) என்பவரை திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

  அப்படியிருக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள், நீதிமன்ற  தலைமைக் காவலர் திருமதி.வளர்மதி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்  திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் (18.12.2024) இன்று திண்டுக்கல் சிறப்பு போக்சோ  நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சுந்தர்ராஜன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

  இந்தாண்டு இதுவரை 72 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.