ஜூலை 5-ந் தேதி எடப்பாடி தலைமையில் மா.செ.ஆலோசனைக் கூட்டம்!

ஜூலை 5-ந் தேதி எடப்பாடி தலைமையில் மா.செ.ஆலோசனைக் கூட்டம்!

உ.சசிக்குமார்,

 தமிழக அரசியலில் பேசு பொருளாக உள்ள செந்தில் பாலாஜியின் செய்திகளால் அதிமுக வை பற்றி எவரும் வாயை திறப்பதில்லை.

 இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 5-ந் தேதி தலைமை நிலைய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

  இது குறித்து வெளியாகியுள்ள தகவலில்  ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து தலைமை கழகச் செயலாளர்களும், மாவட்ட கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

 என்ன பேசப்போகிறார்கள் என்பது பரம ரகசியமாம்