புதிய டிஜிபி பதவியேற்றார்!

புதிய டிஜிபி பதவியேற்றார்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இருவரும் இன்று ஒரே நாளில் பதவியேற்றுக் கொண்டனர். முதலில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்றார். வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலு வலகத்தில் 8-வது மாடியில் உள்ள கமிஷனர் அறையில் சென்னை மாநகர 109-வது கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்றார். இதைதொடர்ந்து அங்கிருந்து விடைபெற்று டி.ஜி.பி.யாக செல்லும் சங்கர் ஜிவால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் புதிய போலீஸ் கமிஷனருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

  பின்னர் சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்றார். அங்கு 31-வது டி.ஜி.பி.யாக அவர் பொறுப்பேற்றார்.

   பணி ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சங்கர் ஜிவாலிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு விடைப்பெற்றார். புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை தலைமையகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.