அனுமதியின்றி வெடிமருந்து தயாரிப்பு!
க.பாலகுரு,
வலங்கைமான் அருகே அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது,
தமிழகத்தில் வெடி தயாரிப்பில் சிவகாசி அடுத்து திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதிகளில் அரசின் உரிய அனுமதிபெற்றும், ஒரு சிலர். அனுமதியின்றியும் நாட்டு வெடி தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. அனுமதியின்றி நாட்டுவெடி தயாரிக்கும் நபர்கள் குறித்து சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தெரியவரும் நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக வலங்கைமான்பகுதி சமூக ஆர்வலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது வலங்கைமான் அருகே மாஞ்சேரி பகுதியில் ராஜதுரை என்பவர் வீட்டில் கடந்த பல மாதங்களாக சிவகாசியை சேர்ந்த புவனேஷ் என்பவர் பார்சல் மூலமாக வெடி மருந்துகளை அனுப்பி அதை வாங்கி ராஜதுரை வீட்டில் வைத்து வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உத்தரவின் பேரில், அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த ராஜதுரை , ரமணா, சூர்யா விஷால் உள்ளிட்ட நான்கு பேரை மட்டும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்களிடமிருந்து 100 கிலோ நாட்டு வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வலங்கைமான் காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள். மேலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் எச்சரித்துள்ளார்கள்.
இந்நிலையில், அனுமதியின்றி நாட்டு வெடிபொருட்கள் தயாரிப்பவர்களை கைது செய்யுமா? காவல்துறை என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

admin
