பாண்டி சரக்கை கடத்திய திமுக புள்ளி கைது!

பாண்டி சரக்கை கடத்திய திமுக புள்ளி கைது!

க.பாலகுரு,

  கள்ள சந்தையில் விற்பதற்காக புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்த திருவாரூர் மாவட்ட திமுக ஒன்றிய பொருளாளர் ஐயப்பன் கைது. 49 மது பாட்டில்கள், சொகுசு காரை பறிமுதல் செய்து திருவாரூர் நகர போலீசார் நடவடிக்கை.

  திருவாரூர் மாவட்டம், கோட்டூர் தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ள ஐயப்பன்(53) என்பவர் புதுச்சேரி மாநில காரைக்கால் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை தன்னுடைய காரில் கொண்டு வந்துள்ளார்.

   இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் நகர போலீசார் திருவாரூர் நகர வடக்கு வீதி பகுதியில் அவருடைய காரை நிறுத்தி சோதனையிட்ட பொழுது அந்த காரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டது உறுதியானது. 

   இதில் நான்கு 2 லிட்டர் மது பாட்டில்களும், 21 ஒரு லிட்டர் மது பாட்டில்களும், 24- 750மிலி  மது பாட்டில்கள் என மொத்தம் 49 பாட்டில்களையும், சொகுசு காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

   விசாரணையில் காரைக்கால் பகுதியில் குறைந்த விலையில் மதுபானம் வாங்கி கோட்டூர் ஒன்றியம் புத்தகரம், சித்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் விலைக்கு  விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.

  இது குறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருவாரூர் மாவட்ட கோட்டூர் தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் ஐயப்பன் மற்றும் வாகன ஓட்டுனர் சதீஷ் மற்றும் சேகர் உள்ளிட்ட மூன்று நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.