கிரைம் ஸ்பாட்டாக மாறிவரும் திருப்பத்தூர்! பட்டபகலில் பெண்ணுக்கு கத்திவெட்டு!

கிரைம் ஸ்பாட்டாக மாறிவரும் திருப்பத்தூர்! பட்டபகலில் பெண்ணுக்கு கத்திவெட்டு!

ஜி.கே.சேகரன்,

பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்! பெண்ணை தலையில் பலமாக இரும்புராடால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு! உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதி.

   திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆரிப் நகர் பகுதி சேர்ந்த பஷீர் இவருடைய மனைவி ரேஷ்மா   (38).

 இவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், இதனை அறிந்த மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

  இதனை அறிந்த ரேஷ்மா கத்தி கூச்சலிடேவே அருகில் இருந்த இரும்புராடால் பலமாக தலையில் மர்ம நபர் தாக்கிவிட்டு¢ கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

 அலறல் சத்தம் கேட்க அக்கம் பக்கத்தினர் ரேஷ்மாவின் வீட்டில் சென்று பார்த்த போது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

  அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த ரேஷ்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறா£.

  ¢இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா மற்றும் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  வீட்டில் இருந்த பெண்ணை தலையில் இரும்புராடால் பலமாக தாக்கி தப்பிச்சென்ற மர்ம நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.