இன்னோவா காரில்Rs 15 லட்சம் குட்கா கடத்தல்!

இன்னோவா காரில்Rs 15 லட்சம் குட்கா கடத்தல்!

கு.சக்திவேல்,

செங்கம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 75 மூட்டை குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் 

தப்பி ஓடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் அருகே இனோவா கிருஷ்டா கார் மாட்டின் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் செங்கம் போலீசார் திருவண்ணாமலை  சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ப்போது வேகமாக வந்தா இன்னோவா கிரிஸ்டா காரை மடக்கி சோதனை செய்த போது அதில்15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 75 மூட்டை குட்கா மற்றும் போதை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இந்நிலையில்அந்த போதை பொருட்களை கடத்தி வந்தவர்கள் காரை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்த காரை பறிமுதல் செய்த செங்கம் காவல்துறையினர், தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்