சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் கார்த்திகை பெருவிழா – பக்தர்களுக்கான வசதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பிரியா; அதிக ஆட்டோ கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எச்சரிக்கை!

சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் கார்த்திகை பெருவிழா – பக்தர்களுக்கான வசதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பிரியா; அதிக ஆட்டோ கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எச்சரிக்கை!

செய்தி: கு. அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் புகழ்பெற்ற யோக நரசிம்மர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை பெருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் ந. பிரியா நேரில் ஆய்வு செய்தார்.

கார்த்திகை பெருவிழாவையொட்டி யோக நரசிம்மர் சுவாமி மற்றும் அமிர்தவல்லி தாயாரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே பக்தர்கள் ரோப்கார் மூலம் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ரோப்கார் இயக்கப்படும் நேரம், சேவை நிறைவடையும் நேரம் மற்றும் ஒரு மணி நேரத்தில் எத்தனை பக்தர்களை மலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்பது குறித்து ஆட்சியர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார்.

முன்னதாக, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

விதிமீறி அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.

ஆய்வின்போது வட்டாட்சியர் முரளி, கோவில் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.