திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவைப்பது நல்லத்தல்ல! பாஜக தமிழிசை பேட்டி!
ஜி.கே.சேகரன்,
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவைப்பது சமுதாயத்திற்கு நல்லத்தல்ல பிரதமர் நாளை தமிழகத்திற்கு வரும் போது அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்று தமிழகத்தின் கோரிக்கையை சொல்ல வேண்டும் கடிதம் எழுதினால் மட்டும் போதாது - மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது சமுதாயத்திற்கு நல்லதல்ல - சத்துவாச்சாரியில் தமிழிசை சௌந்தர ராஜன் பேட்டி
வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்குசாவடி பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டமானது மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. அதில் பாஜக மாவட்ட துணை செயலாளர் சரவணன் மற்றும் குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார்
பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பிரதமர் மோடி அவர்கள் விவசாயிகளுக்காக வருகிறார். முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார், ஈகோவாக எடுத்துகொண்டு கடிதம் எழுதி வரவேற்பது சரி கிடையாது.
நமக்கு எவ்வளவு மாற்றுகொள்கை இருந்தாலும் வரவேற்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான நிதியை தாராளமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. கொடுக்கவில்லை என்பது தவறான பிரச்சாரம் நிதி ஆயோக் கூட்டத்திற்கே தமிழக முதல்வர் செல்லவில்லை.
நம் ஊருக்கு வரும் போது பிரதமரை வரவேற்காமல் இருப்பது தமிழ் கலாச்சாராமா நீங்கள் வேற்றுமையை காண்பிக்க வேண்டாம்.
பீஹாரில் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து பணியாற்றினால் மக்களுக்கு நல்லது நடக்கும் மோதல் போக்கை காண்பிக்காமல் வரவேற்பது தமிழ் பண்பு.
எது உங்களை தடுக்கிறது ஏன் நீங்கள் ஒருமாவட்டம் சென்றால் கலெக்டர் எஸ்பி அமைச்சர் எல்லாம் வரவேற்கிறார்கள் உங்களை உதாசீனப்படுத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்.
2002 பட்டியலில் பெயர் இருந்தால் பட்டியலை பார்த்து நான் பூர்த்தி செய்தேன் பி.எல்.ஓ அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்காதது என்பது தமிழக அரசின் தவறு.
தேர்தல் ஆணையம் அதிகாரிகள் ஒத்துழைககாதவர்களை ஏன் கொடுத்தார்கள் மாநகராட்சி 18 தொகுதிகளில் முகாம் போட்டுள்ளனர் அதனை வரவேற்கிறேன் இது வேண்டாம் என சொல்ல் முடியாது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தன் செய்வதில் எந்த அவசரமுமில்லை 64 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டதாக ராகுல் காந்தி சொன்னாரே யாராவது எங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள் என சொன்னார்களா?
அதே போல் எந்த வாக்காளரும் பீஹாரில் மறு வாக்குபதிவு கேட்கவில்லை, அவசரம் ஒன்றுமில்லை அதன் பிறகு தான் தேர்தலை சந்திக்க வேண்டும் கள்ள ஓட்டுபோடுவீர்கள் நீங்கள் எஸ்.ஐ.ஆர் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளேன்.
அதனால் எந்த பாதிப்புமில்லை தொழில்நுட்ப வளர்ந்துவிடவே இப்போது குறுகிய கால அவகாசத்தில் செய்கிறோம் தேர்தல் முன்னாள் தான் பொய் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் தேர்தலில் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
இது பாஜகவின் திட்டமில்லை தேர்த ஆணையத்தின் திட்டம், நாம் எல்லோரும் நியமித்தோம் திமுக வெற்றி பெற்றது போலி வாக்காளர்களை நம்பிதான் வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடவுள்ளனர் இறந்தவர்களை எல்லாம் எழுத்து வந்து ஓட்டு போட வைத்தனர்.
சென்னை தூத்துக்குடி போன்ற விமான நிலையங்கள் தயாராகி வருகிறது வேலூர் விமான நிலையமும் நிச்சயம் திறக்கபடும் பாஜக கூட்டணி பலமில்லை என சொல்லும் சீமானே பலமில்லாது தான் இருக்கிறார்.
பீஹாரில் பாஜக கூட்டணி தான் வெற்றி பெற்றது, தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது ஆனால் சீமான் கருணாநிதியை தாண்டி கரிகாலனிடம் சென்றுவிட்டார். சீமான் எஸ்.ஐ.ஆர் எதிர்க்கிறார் திமுகவையும் எதிர்க்கிறார்.
தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என டிடிவி தினகரன் சொல்வது ஸ்டாலினை எதிர்த்த அம்மாவை என்ன மன நிலையில் வைத்துள்ளீர்கள் எல்லோரும் உதிரியாக இல்லாமல் உறுதியாக இருப்போம்.
திமுகவை தோற்கடிப்போம் பிரேமலதா பீஹார் தேர்தலை பாராட்டியுள்ளார் அவர் நல்ல முடிவை எடுப்பார் பாமக தேமுதிக அமமுக,விஜய் சீமான் எல்லோருடைய கருத்து திமுகவை தோற்கடிப்பது தான்.
அந்த வியூகத்திற்குள் எல்லோரும் இணைந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் 1000 பெண்களுக்கு கொடுத்துவிட்டு பெண்களின் உரிமை பறிக்கபடுகிறது பெண்களுக்கு பாதுகாப்பில்லை பேருந்தில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
முற்றிலும் மதுவிலக்கால் பீஹாரில் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவைப்பது சமுதாயத்திற்கு நல்லத்தல்ல மக்கள் சிரமப்படுகின்றனர் எல்லோரும் இதனை சிந்திக்க வேண்டும் என சொன்னார்.

admin
