தி நகரில் கட்டப்பட்ட 164.9 கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு பாலம் வேஸ்ட்டா?!

தி நகரில் கட்டப்பட்ட 164.9 கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு பாலம் வேஸ்ட்டா?!

ஜி.சாந்தகுமார்,

  தி.நகர் புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் தி.நகர் உஸ்மான் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் அந்த தகவல் பொய் என்று தற்போது தெரிய வந்திருக்கிறது.

 இதுதொடர்பாக ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தி பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த வாரம் செவ்வாய் அன்று தி.நகர் இரும்பு பாலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

  இந்த பாலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க பயன்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

  இந்நிலையில் ஆயுத பூஜையில் குவிந்த மக்கள் அனைவரையும் சமாளிக்கும் வகையில் போக்குவரத்து இல்லை என்றும், பொதுமக்கள் திணறும் நிலை தொடர்வதாகவும் குற்றசாட்டப்படுகிறது.

  அப்படியென்ன பிரச்சினை என்று விசாரித்தால், சிஐடி நகரில் இருந்து இரும்பு பாலத்தில் ஏறி பயணிக்கும் வாகன ஓட்டிகள், 4 வழி விவேக் ஜங்ஷனில் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இங்கு போக்குவரத்தை எளிதாக கையாளும் வகையில் போலீசாரிடம் எந்தவித திட்டங்களும் இல்லை என்கின்றனர்.

   இரும்பு பாலம் வருவதற்கு முன்னதாக அண்ணா சாலையில் இருந்து தி.நகர் வரும் வாகனங்கள் வெங்கட் நாராயணா சலை வழியாக வந்து லிங்க் ரோடு மூலம் சவுத் வெஸ்ட் பாக் ரோடு சென்று, அங்கிருந்து பனகல் பார்க் வழியாக விவேக் ஜங்ஷன் சென்றடைந்தனர்.

  இந்த வழித்தடத்தில் பயணிப்பது மிகவும் எளிதாக இருந்தது. தற்போது அப்படியில்லை எனக் கூறப்படுகிறது. முன்பு ஆட்டோமேட்டிக் சிக்னல்கள் மூலம் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது போலீசார் மூலம் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தீபாவளி வரை இப்படித்தான் இருக்கும்

  இதுபற்றி தி.நகர் போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் எஸ்.ராஜா கூறுகையில், போக்குவரத்து நெருக்கடிக்கு ஏற்ப சிக்னல்களில் டைமிங் மாற்றி அமைக்கப்படும். கடந்த சில நாட்களாக சந்தித்து வந்த நெருக்கடி என்பது பண்டிகை காலப் பிரச்சினை மட்டுமே. நீண்ட கால அடிப்படையில் இருக்காது. இத்தகைய சிக்கல் வரும் தீபாவளி பண்டிகை வரை இருக்கும்.

  இதனை சமாளிக்க மாநகரப் போக்குவரத்து கழகத்திடம் பேசி சில வழித்தட மாற்றங்களை மேற்கொண்டு வருகிறோம் என்றார். பொதுமக்களிடம் கேட்கையில், முறைகேடான பார்க்கிங், சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவை சிக்கலாக இருக்கின்றன.

 அவை அகற்றுவதில் பல்வேறு அரசியல் இடையூறு இருப்பதால் அதிகாரிகள் மூச்சு வாங்கிக்கொண்டிருக்கின்றனர்.

 அதுசரி,

குறிப்பு:-  சென்னை தி.நகரில் தெற்கு உஸ்மான் ரோடு மற்றும் சிஐடி நகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் 1.2 கிலோமீட்டர் தூரத்திற்கு 164.9 கோடி ரூபாய் மதிப்பில் இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது வடக்கு உஸ்மான் ரோட்டில் 800 மீட்டர் நீளத்திற்கு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாலத்துடன் இணைக்கப்பட்டது என்பது சுட்டிக்காட்டப்படக்கூடியது ஆகும்.