பெண் பணியாளருக்கு.....துணைப்பதிவாளர்?

 பெண் பணியாளருக்கு.....துணைப்பதிவாளர்?

எம்.ஏ.கண்ணன்,

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதில் தேனி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணை பதிவாளர் மற்றும் செயலாளர்கள் பணி நேரத்தில் மது அருந்திக்கொண்டு பணியாளர்களை ஒருமையில் பேசுவதும், காரணம் இன்றி பணியிட மாறுதல் செய்து வருவதாகவும், மேலும் பணியாளர்களை தங்களுக்கு தேவையான தொழிற்சங்கங்களில் சேரச்சொல்லி நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து துணைப்பதிவாளரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.

இதேபோல் திருச்சியில் கூட்டுறவு துறையில் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திய பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அது குறித்து புகார் தெரிவித்தால் அவர் மகன் மீது பொய் கஞ்சா வழக்கு போடப்பட்டு கூட்டுறவுத் துறையில் தொடர்ந்து பணியாளர் விரோத போக்கை கடைப்பிடிப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றன.

  எனவே தேனி துணைப்பதிவாளர் மற்றும் செயலாளரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.