எல்லாம் சரிங்க எம் .எல். ஏ சார்?சர்ச் அருகே உள்ள குப்பையை சீர்படுத்துங்களேன்!

எல்லாம் சரிங்க எம் .எல். ஏ சார்?சர்ச் அருகே உள்ள குப்பையை சீர்படுத்துங்களேன்!

கு.அசோக்,

வேலூரில் சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த செலவில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தையும் சட்டமன்ற அலுவலகத்தில் வழங்கினார். 

  வேலூர்மாவட்டம்,வேலூரில் சட்டமன்ற அலுவலகம் அருகில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில்  பரிசு பொருட்கள் அரிசி நெய் ,சமையல் எண்ணெய் பிரியாணி செய்ய ரூ.200 ரொக்கப்பணம் போன்றவற்றை வழங்கினார்.

 தனது தொகுதி கிறிஸ்தவ மக்கள் 1547 பேருக்கு தனது சொந்த பணம் ரூ15 லட்சம் மதிப்பில் இவைகளை வழங்கினார்.

இதில் மேயர் சுஜாதா ,முன்னாள் எம்பி முகமது சகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்ரா

 ஆண்டுதோறும் இந்த சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த பணத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட இந்து மக்களுக்கும் ரம்ஜானை கொண்டாட இஸ்லாமிய மக்களுக்கும் தொடர்ந்து பணம் பரிசு பொருட்களை வழங்கி வருகிறார்.

  இந்த ஆண்டு தான் கிறிஸ்தவ மக்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நோக்கில் இதனை வழங்கினார் பொதுமக்களையும் இதனை வாங்கி சென்றனர் இதன் மூலம் இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் பாகுபாடின்றி விழாக்களை கொண்டாட பொருட்கள் பணம் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  எல்லாம் சரிங்க எம். எல் .ஏ. சார், சார்பனாமேடு பகுதியில் உள்ள பிஷப் முகாம் அலுவலகம் மற்றும் அண்ணா சாலையில் உள்ள சி. எஸ் .ஐ. தேவாலயம் பகுதிகளில் குப்பை கொட்டப்படுகிறதே இந்த பண்டிகை காலத்திலாவது அவற்றை அகற்றி சீராக்கலாமே.