விருதுநகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!

விருதுநகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள்!

  கே.ஏ.ஜெகதீஸ்வரி,

  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  சிவகாசி கலால் துறை வட்டாட்சியர் சாந்தி தலைமையில் வெண்மணி கிராமிய கலைக்குழு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

  ராஜபாளையம், ஜவஹர் மைதானத்தில் தெற்கு காவல் ஆய்வாளர் செல்வி கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.  கலை குழுவின் தலைவர் பால்ராஜ் தலைமையில் கலைக்குழுவினர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து ஆடல் பாடல் மூலம் விளக்கி பிரச்சாரம் செய்தனர்.

   முடிவில் தெற்கு சார்பு ஆய்வாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார். தொடர்ச்சியாக ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி முன்பு இந்த போதை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விருதுநகர் மாவட்டம் முழுவதும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.