புனரமைப்பு பணியை ஏனோதானோ என்று செய்ய வேண்டாம்! அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் ரிக்கவுஸ்ட்!
கு.அசோக்,
வாலாஜா பாலாறு அணைக்கட்டு புனரமைப்பு பணியை ஏனோதானோ என்று செய்யாமல் தரமானதாக செய்ய வேண்டும் 100 ஆண்டுகள் கடந்தாலும் தடுப்பணை சிறப்பாக இருக்க வேண்டும் - அடிக்கல் நாட்டு விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, பாலாறு அணைக்கட்டு தடுப்பணையை ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பது மற்றும் ரூ.6.5 கோடி மதீப்பீட்டில் திமிரி அருகேயுள்ள வெள்ளக்குளம் கிராமத்தில் இரு மலைகளுக்கிடையே புதிய தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் வழைப்பந்தல் கிராமத்தில் கமண்டல நாகநதியின் குறுக்கே புதிய அணைகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவானது நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடந்த விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி தொழில் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் எதே செய்தோம் என்று பணியை செய்ய கூடாது. இந்த கல்வெட்டில் என் பெயரும் உள்ளது ஆகையால் அணை புனரமைக்கும் பணியை தரமாக செய்ய வேண்டும்.
100 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் இல்லையென்றாலும் பணி நன்றாக இருந்தால் இங்கு எங்கள் பெயர்கள் நிற்கும். ஆற்காடு நகரத்தில் கால்வாய் அமைக்கும் பணி கோரியுள்ளனர், அதனையும் ஆய்வு செய்ய உள்ளேன்.
நான் என் மூச்சு இருக்கும் வரையில் நான் இராணிப்பேட்டைக்கு நன்றி செலுத்துவேன் நான் பலமுறை நின்று காட்பாடியில் ஜெயித்து மந்திரியாக இருக்கலாம் ஆனால் இதற்கெல்லாம் மூல காரணம் இராணிப்பேட்டை மக்கள். அவர்கள் இங்கேயே இராணிப்பேட்டை தொகுதியில் நில்லுங்கள் என சொன்னார்கள் ஆனால் நான் தான் கொழுத்து போய் காட்பாடி தொகுதிக்கு போனேன். ஒரு முறை காட்பாடியில் தோற்றும் விட்டேன். 54 ஆண்டுகள் நான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பணியாற்றுகிறார் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இன்றைக்கு 5 கோடிக்கு பல நலத்திட்டங்களையும் வழங்கியுள்ளோம். இதற்கு முன்னாள் இங்கு ஒரு டிராவலர் பங்களா இருந்தது அதனை புதியதாக நீங்கள் பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என பேசினார் .

admin
