மாடு வளர்க்குதா மாநாகராட்சி?!
த.நெல்சன்,
வேலூர் அண்ணா சாலை¢ பழைய மீன் மார்க்கெட் சிக்னலில் இருந்து சென்ட்ரல் சர்ச் வரை எடுக்கப்பட்ட சிறிய வீடியோ இந்த சாலையைத் தான் தினமும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாநகராட்சி மேயர் உட்பட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படிப்பட்ட பிஸியான சாலையில் மாடுகள் சாவகாசமாக படுத்துக் கொண்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் மாநகராட்சி பொறுப்பாளர்கள் கண்ணில் ஏன் இது தென்படவில்லை

மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் பொதுமக்கள்.
அங்கு மட்டுமின்றி வேலூர் சத்துவாச்சாரி, கிரீன் சர்க்கில், வடக்கு காவல் நிலையம் எதிரில் என பல இடங்களில்
சாலைகளை மாடுகள் தான் ஆக்கிரமித்துள்ளன.
ஒருபக்கம் ஓட்டல் காரர்கள் மறுபக்கம் மாடுகள் கூடவே பன்றிகள் என்று வேலூர் பரபரப்பாகத்தான் உள்ளது.
மாநகராட்சி மாடு வளர்க்கிறதா என்று பொது மக்கள் கேட்கிறார்கள்.

admin
