மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்"! மு.க.ஸ்டாலின்!

B.Ramesh anandaraj,
மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்" என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
இன்று தமிழகம் வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.
அந்த வகையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான சிங் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னைக்கு வந்தார்.
அவர்கள் இருவரையும் சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " டெல்லி அரசுக்கு ஆளுநர் மூலமாக தொடர் நெருக்கிடி கொடுக்கப்படுகிறது. அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லி அரசு ஆதரவு அளிக்க வேண்டும். மத்திய அரசு டெல்லி அரசுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்" என்றார்.