நாட்டை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இடம் இருந்து காங்கிரஸ் மீட்கும்! காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பேட்டி!
ஜி.குலசேகரன்,
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இடம் இருந்த நாட்டை மீட்டெடுக்க காங்கிரசை கிராமங்கள் தோறும் வலுப்படுத்தி வருகிறோம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மதுகௌட் யாஷிக் வேலூரில் பேட்டி.
வேலூர்மாவட்டம், வேலூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது மாவட்டத்தலைவர் டீக்காராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹீத் பாஷா,மற்றும் சித்தரஞ்சன்,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதுகௌட் யாஷிக் பங்கேற்று தொண்டர்களுக்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மதுகௌட் யாஷிக் கூறுகையில், கட்சி கட்டமைப்பு ஜனாநாயக கட்டமைப்பு மாவட்ட அளவில் கட்டமைக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி தற்போது ஈடுபட்டுள்ளது.
கடந்த 2014 முதல் 10 ஆண்டுகளாக பாரதியஜனதாவுடன் காங்கிரஸ் போரிட்டு வருகிறது. அதில் ஸ்டாலினும் ராகுல் காந்தியுடன் இணைந்து மத்திய அரசின் மக்கள் பாகுபாடு அரசியலுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது, காமராஜர் போன்ற தலைவர்களும் அண்ணாதுரை கருணாநிதி போன்ற தலைவர்களும் தந்த திராவிட இயக்கம் சமூக நீதியை அளித்து மக்களை காக்கிறது. ராகுல் காந்தி கருத்து பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார், அதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவும் செய்து வருகிறார்.
அந்த வகையில் காங்கிரஸ் கொள்கைகளை மக்களிடம் எடுத்து செல்லவும் ஆங்காங்கே புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் மாவட்ட அளவில் காங்கிரஸ் கமிட்டியையும் கிராமங்கள் தோறும் வார்டு வாரியாகவும் வலுப்படுத்தவுள்ளோம்.
காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை நடத்தவுள்ளோம் அதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால் அவர்கள் 3 ஆண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரையில் கட்சியிலிருந்து வேண்டும்.
காங்கிரஸ் மாவட்டத்தலைவர் பதவிக்கான தேர்தலை வெளிப்படையாக நடத்தவுள்ளோம் வேலூர் வரலாற்று சிறப்புமிக்க இடம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இடம் இருந்த நாட்டை மீட்டெடுக்க காங்கிரசை கிராமங்கள் தோறும் வலுப்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

admin
