பஞ்சாப் தேர்தல் குஸ்திக்கு காங்கிரஸ் தயார்! வேட்பாளர்களை அறிவித்தது.!!

ஜே.தேவபிரகாஷ்,
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இடம் பெறாத பலர் கலகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், சம்கவுர் சாகிப் தொகுதியில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, அமிர்தசரஸில் நவ்ஜோத்சிங் சித்து போட்டியிடுகின்றனர்.
ஆனால் முதல் வேட்பாளர் பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏக்களில் பெரும்பாலோருக்கு சீட் வழங்கப்படவில்லை என அங்கு கொதிப்பு ஏற்பட்டிருக்கிறது.