வேலூரில் எடப்பாடி பழனிச்சாமி!

வேலூரில் எடப்பாடி பழனிச்சாமி!

ஜி.கே.சேகரன்,

  வேலூர் மாவட்டத்திற்கு விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

 வேலூர் மாவட்டம், வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த முன்னாள் தமிழக முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

  பின்னர் அவருக்கு சால்வை வழங்கியும் அவருடம் புகைப்படம் எடுத்தும் தொண்டர்கள் சென்றனர்.

 நிர்வாகிகள் குப்பன், நாகு,  தாஸ், மேகநாதன், சி.கே.சிவாஜி, ஜி.கே.முரளி உள்ளிட்ட அதிமுகவினர் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் வேட்டுகள் முழங்க வரவேற்றனர்.

 ஆனால் ஒரு முன்னாள் முதல்வருக்கு மிக குறைந்த அளவில் 150-க்கும் குறைவான தொண்டர்களே வரவேற்பளித்தது அதிமுகவினர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.