போலீசுடன் மோதல்!
ஜி.கே.சேகரன்,
குடும்பப் பிரச்சினையில் ஒரு தலைப்பட்சமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக கூறி காவல் நிலைய முற்றுகையிட முயன்ற 50 இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தி தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியை சேர்ந்த பயாசுதீன் என்பவருக்கும் உமையாணி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் பயாசுதீன் சகோதரர் ரியாஸ் சுதீன் என்பவருக்கும் உமையாணிக்கும் தகராறு ஏற்பட்டு உமையாணியை வீட்டை விட்டு அனுப்பிவிட்டாராம்.
மேலும் அவரை ஆபாசமாக பேசியதாகவும் கூறிகுடியாத்தம் காவல் நிலையத்தில் தனது கணவர் பயாசுதீனின் சகோதரர் ரியாஸ்சுதீன் மீது உமையானி புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் குடியாத்தம் நகர காவல் துறையினர் ரியாஸ்சுதீன் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் காவல்துறையினர் ஒரு பட்சமாக செயல்பட்டு ரியாஸ்சுதீன் மீது விசாரணை மேற்கொள்ளாமல் வழக்கு பதிவு செய்ததாக கூறிரியாஸ்சுதீன் தரப்பினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர்காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதையடுத்து சித்தூர் கேட் பகுதியில் இருந்து காவல் நிலையம் முற்றுகையிட முயன்ற ரியாஸ்சுதீன் தரப்பினரை சித்தூர் கேட் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும் ரியாஸ்சுதின் தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா.¢ இதனால் சித்தூர் கேட் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது மேலும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

admin
