நிர்வாண படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல்! ஹோம் கேர் என்கிற பெயரில் குற்றம்!

நி.ஜோதிஷா,

தபால் அலுவலரை நிர்வாணப்படுத்தி பணம் பறிப்பு! ஜகஜால இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது!

 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நிக்லஸ் மனைவி செல்வி என்கிற சூசையம்மாள் இவர் சன் லைட் ஹோம் கேர் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மூகண்டஹள்ளி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி நளினி வேலைக்கு சேர்ந்துள்ளார்.

 இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் இவர் திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

 இவருடைய தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் அவரை பராமரிக்க சன் லைட் ஹோம் கேர் மூலம் நளினியை திருப்பத்தூருக்கு வேலைக்கு வர வைத்துள்ளார்.

 அப்போது மாதேஸ்வரனுக்கும் நளினிக்கும் இடையே வேற லெவல் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நளினி மாதேஸ்வரன்  நிர்வாணமாக இருக்கும் வீடியோவை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து ஹோம் கேர் உரிமையாளர் செல்விக்கு அனுப்பி உள்ளார்.

 அதன் பின்பு அந்த வீடியோவை செல்வி மாதேஸ்வரனுக்கு அனுப்பி ஐந்து லட்சம்  பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

   இதனால் பயந்து போன மாதேஸ்வரன் 2 லட்சத்து  30ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக தெரிகிறது.

   பின்னர் மீதி பணத்தை மாதேஸ்வரனிடம் கேட்ட செல்வி அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் செல்வியின் தொலைபேசி அழைப்பை மாதேஸ்வரன் தவிர்த்ததாக தெரிகிறது.

   ஆத்திரம் அடைந்த செல்வி அதன் வீடியோவை தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆம்பூர் பகுதியை விமல் ராஜிக்கு அனுப்பி அவரிடம் பணம் கேட்கும்படி கூறியதன் காரணமாக விமல் ராஜ் மாதேஸ்வரனுடைய வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார்.

   இதனால் பயந்துபோன மாதேஸ்வரன் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீஸாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வி, நளினி மற்றும் விமல்ராஜ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

  இது குறித்து விசாரித்த போது இந்த ஹோம் கேர் என்கிற பெயரில் பலரை இப்படித்தான் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. செக்ஸ் மேட்டர் என்பதால் எப்படி வெளியில் சொல்வது என்று பயந்து பலரும் அமைதியாக இருந்துவிடுவதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு செயல்படுவது இவர்களின் வாடிக்கையாம்.