பிரட் சாப்பிட்டு மயங்கிய ஆட்டோ ஓட்டுநர்! ஃபுட் பாய்சன் என மருத்துவர்கள் சிகிச்சை!

பிரட் சாப்பிட்டு மயங்கிய ஆட்டோ ஓட்டுநர்! ஃபுட் பாய்சன் என மருத்துவர்கள் சிகிச்சை!

ஜி.குலசேகரன்,

வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பேக்கரி கடையில் பிரட் ரொட்டி வாங்கி சாப்பிட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு வாந்தி மயக்கம். ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த அமீர் பாஷா(40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து நிலையம் அருகில் உள்ள வ.உ.சி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் இணைந்து ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

  இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும்  ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பேருந்து நிலையம் முன்பாக உள்ள சென்ட்ரல் பேக்கரி கடையில் இருந்து பிரட் ரொட்டி வாங்கி சென்றுள்ளார்.

 வீட்டிற்க்கு சென்ற நிலையில் குழந்தைகள் தூங்கி உள்ளதால் இன்று காலை அவர் இரவு வாங்கிச் சென்ற பிரட் ரொட்டியை சாப்பிட்டு விட்டு ஆட்டோ ஓட்டிக்கொண்டு ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்துள்ளார். அங்கே திடீரென்று அவர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார்.

  இதனைத் தொடர்ந்து மயக்கம் அடைந்த அமீர் பாஷாவை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறது. காலையில் சாப்பிட்ட பிராட் ரொட்டியால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  இதனைத் தொடர்ந்து காலாவதியான பிரட் ரொட்டி விற்ற கடை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.