கிரானைட் குவாரிகள் நடத்தும் கனிம வள இயக்குநர்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கனிமவள இணை இயக்குனராக உள்ளவர் எந்த அனுமதி இல்லாத கல்குவாரிகளை நடத்திவருகிறார். இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பை அவர் ஏற்படுத்தி வருவதாக பலரும் குரலெழுப்பியிருக்கிறார்கள்.
கனிமவளத்தைப் பாதுகாக்க வேண்டிய அலுவலர், அரசாங்கத்தின் எவ்வித அனுமதியுமின்றி ஒரு ஊரையே வளைத்து அங்குள்ள கனிம வளங்களைக் கொள்ளையடித்து வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பஞ்சப்பள்ளி பகுதியில் தான் இந்த திருட்டுத்தனம் நடக்கிறது.
தற்போது சேலம் மாவட்ட கணிமவளத் துறையில் இணை இயக்குநராக இருக்கும் சுரேஷ் என்பவர் தான் இந்த தில்லாலங்கடி வேலையின் முக்கியமானவர்.
இவர் ஏற்கனவே முன்பு சேலத்தில் கனிமவள ஏ.டி.யாக இருக்கும்போதே பல குவாரிகள் அனுமதியில்லாமல் செயல்படுவதற்கு பல கோடிகளை ரூபாய் லஞ்சமாக வாங்கி குவித்தவர்.
இவர் கடலூரைச் சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கே.சி.சம்பத்தோட மாப்பிள்ளை- மாமா கேசி சம்பத் உதவியோடு பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள டி.டி.யாக பொறுப்பேற்றார்.
அதன் பின்பு பர்கூர், தேன்கனிக்கோட்டை , திப்ப சத்திரம் பகுதிகளில் அரசு அனுமதியின்றி செயல்ப்பட்ட கல்குவாரிகளைக் கண்டு பிடித்து அந்த கல்குவாரி உரிமையாளர்களிடம் பல லட்சங்களை பெற்றுக் கொண்டு அவர்களின் திருட்டுதனத்துக்கு பாதுகாவலரானார்.
அதற்குப் பின்பு கடலூரில் இருந்த தன்னோட மாப்பிள்ளை கார்த்திக்கை வரவழைத்து அந்த அனுமதியில்லாத மூன்று கல் குவாரிகளை கையகப்படுத்தி அதிலிருந்து விலையுர்ந்த கிரானைட் கற்களை கட் பண்ணி கடத்தி வருகிறார்.
திப்ப சத்திரம், பஞ்சப்பள்ளி டேம் அருகே உள்ள மலைகளில் இரவு நேரங்களில் வெடி வைக்கிறாங்கள். இதனால் காட்டுக்குள்ள இருக்கிற யானைகள் எல்லாம் ஊருக்குள்ள வருகிறது.
கடந்த பத்து வருட அதிமுக ஆட்சியில் போலி அனுமதி சீட் (பர்மீட் )போட்டு சர்வ சாதாரணமாக மலைகளை குடைந்து கிரானைட் கற்களை கடத்த்தியவர்கள் தற்போதும் அதை தொடர்கிறார்கள்.
இந்நிலையில் சுரேஷிக்கு கிருஷ்ணகிரியிலிருந்து பதவி உயர்வு அளித்து, திருவண்ணாமலை மாறுதல் வந்தது. ஆனாலும் தில்லாலங்கடி சுரேஷ் கிருஷ்ணகிரியை விட்டு நகரவில்லை.
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்ர் அன்பழகனுக்கு பல கோடிகளை சம்பாதித்துக் கொடுத்து சில கோடிகளை அமுக்கியவர் தான் இந்த சுரேஷ் என்கிறார்கள்.
அ.தி.மு.க.ஆட்சி போய் தி.மு.க.ஆட்சி வந்த பின்னர் சுரேஷ் வெயிட்டிங் லிட்ஸ்ட்டில் வைக்கப்பட்டார்.
இருந்தாலும் தற்போது அதை சரிகட்டி சேலத்திலேயே செட்டிலாகிவிட்டாராம்.
அந்த வகையில் ஆட்சி மட்டும் தான் திமுக கையில் வந்துள்ளதாகவும் அதிகாரம் எல்லாம்ல அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகளின் கையில் அப்படியே இருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம்.
அரசு அலுவலராக இக்கும் சுரேஷ் ஊழல் செய்து பல நூறு கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக தகவல்கள் உள்ள நிலையில் இன்னும் மாநில லஞ்ச ஒழிப்பு போலிசார் அவரை கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையே?
இந்த விவகாம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும்,சட்டவிரோதமான செயலைச் செய்துக் கொண்டிருக்கும் அரசு அலுவலரான சுரேஷ் பணியிடை நீக்கம் செய்ய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

admin
