புதிய நீதிக்கட்சியின் நிர்வாகிகளை கூண்டோடு கலைத்த ஏ.சி.எஸ்...? வெறிச்சோடிய வேலூர் நாடாளுமன்ற தொகுதி!

புதிய நீதிக்கட்சியின் நிர்வாகிகளை கூண்டோடு கலைத்த ஏ.சி.எஸ்...? வெறிச்சோடிய வேலூர் நாடாளுமன்ற தொகுதி!

ம.பா.கெஜராஜ்,

 வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நியமிக்கப்பட்டிருந்த புதிய நீதிக்கட்சியின் நிர்வாகிகள் அதன் தலைவர் ஏ.சி.சண்முகத்தால் கூண்டோடு கலைக்கப்பட்டனர்.

புதிய நீதி கட்சியின் மாநில மருத்துவர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள  Dr.கார்த்திகேயன், தலைவர் A.C. சண்முகம்  அவர்களிடம் ஆசி  பெற்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ன புதிய நீதி கட்சியின் சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், வேறு ஒரு பட்டையை கிளப்பும் வேறு ஒரு சம்பவம் அக்கட்சியில் அரங்கேறி இருக்கிறது. 

  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார் என்பதை நாம் அறிவோம்.

 இம்முறை வென்றே தீர வேண்டும் என்று களம் கண்ட ஏ.சி.சண்முகம் தேர்தல் பணிகளை கனக்கச்சிதமாகவும் பண தாராளமாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டார். கடந்த முறை போல் இல்லாமல் இம்முறை எதிர் வேட்பாளருக்கு ஏகப்பட்ட பணிச்சுமையை ஏற்படுத்தினார். ஆக நல்லபடியாக தேர்தல் பணியாற்றினார் என்றே சொல்லலாம்.

 இருந்தாலும் கூட, தேர்தலுக்குப் பின்னர் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதிய நீதிக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களை அழைத்து கூட்டங்களை நடத்தினார்.

  புதிய நீதி கட்சியை பொருத்த மட்டில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமிக்கப்பட்டிருந்தனர். அப்படியெனில் புதிய நீதிக்கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் மூன்று மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பணியாற்றினார்கள்.

 அதேபோல் ஒன்றியம், நகரம், கிளை என அமைப்புகளை ஏற்படுத்தி வாக்குகளை பெறும் பணியை செய்தனர்.

இந்நிலையில் மேற்படி நிர்வாகிகள் தேர்தலில் என்ன விதமான பணிகளை ஆற்றினர், எங்கெல்லாம் தவறிழைத்தனர் என்பதை அறிய, புதிய நீதி கட்சியின் தலைமை நேரில் நிர்வாகிகளை கூட்டி பேசியது.

  அதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை விட இவர்கள் சிறப்பாக பணியாற்றவில்லை என்பதை புதியநீதி கட்சியின் தலைமை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆகவே தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டிருந்த பணியாளர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் ஆகியோர் அனைவரையும் அந்தந்த பதிவில் இருந்து அகற்றினார்.

 அதாவது, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதிக் கட்சியை கூண்டோடு கலைத்து விட்டார்.

  உணர்வு பூர்வமாக தேர்தல் பணியாற்றவில்லை, நண்டு கதையைப்போல ஒருவரை ஒருவர் கீழே இழுத்துக் கொண்டனரே தவிர, சொந்தக் கட்சிகாரர்களையும், கூட்டணி நிர்வாகிகளையும் அரவணைத்து செல்லவில்லை என்பதாலேயே இந்த முடிவாம்.

  ஏற்கனவே ஏ.சி.எஸ்-க்காக ஒழுங்காக தேர்தல் பணியாற்றவில்லை என்கிற காரணத்துக்காக பேர்னாம்பட்டு ஒன்றிய பாஜக வின் ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் நீக்கி அமைப்பை கலைத்தனர் என்பது நினைவுகூறத் தக்கதாகும்.

சூப்பர் ...ஜீ