அமைச்சர் தொகுதியில் ரூ.3. 60 கோடி மதிப்பீட்டில் கட்டிடம்!

அமைச்சர் தொகுதியில் ரூ.3. 60 கோடி மதிப்பீட்டில் கட்டிடம்!

கு.அசோக்,

காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.3. 60 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து  மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்

  வேலூர்மாவட்டம், காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் புதியதாக ரூ,3.  60 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி கலந்துகொண்டு முதல்வர் கட்டிடம் திறந்து பின்னர் குத்துவிளக்கேற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துவங்கி வைத்தார் இவ்விழாவில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் ஒன்றிய குழு துணை தலைவர் சரவணன்,துணை மேயர் சுனில்,மாமன்ற உறுப்பினர் அன்பு ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.