நீங்கள் உத்தமராச்சே ஏன் பயப்படுகிறீர்கள்? திமுக அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
ஜி.கே.சேகரன்,
என் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்து குற்றம்மற்றவன் என நிருபித்தேனோ அதை போல் திமுகவும் அமலாக்கதுறை சோதனை டாஸ்மாக் ஊழல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் - அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணகாலையரங்கம் எதிரில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
இந்த வேலூர் மாநகரத்துக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவந்தோம். அதிமுக திட்டத்தை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. ஆனால், இன்னும் பாதாள சாக்கடைத் திட்டம் முழுமை பெறவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து திட்டங்களும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொடுக்கப்படும்.

இன்றைக்கு இ.டி ரெய்டுக்கு அனைத்து அமைச்சர்களும் பயந்துபோய் உள்ளனர். நீதிமன்றம் ஏறி இறங்குகிறார்கள். இதே திமுக என் மீது நெடுஞ்சாலைத்துறையில் 4800 கோடி ரூபாய் ஊழல் என்று வழக்குப் போட்டது. அவர்களே வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று சொன்னபோதும், நான் மறுத்து வழக்கை நடத்தி நிரபராதி என்று உங்கள் முன் நிற்கிறேன்.
திமுகவினர் வாய்தா வாங்கிக்கொண்டு இருப்பார்கள், அமலாக்கத்துறை ரெய்டுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று சொல்பவர்கள் ஏன் ரூமை பூட்டி வைத்திருக்கிறீர்கள். தூய்மையான ஆட்சி என்று சொல்பவர்கள் ஏன் பூட்டுகிறீர்கள்.
நீங்கள் உத்தமராச்சே ஏன் பயப்படுகிறீர்கள்? டாஸ்மாக் ஊழல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. 40 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது. வரிகளை உயர்த்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு எல்லா வரிகளையும் உயர்த்திவிட்டனர்.
மின் கட்டணத்தையும் பெருமளவு உயர்த்திவிட்டனர். மாநகராட்சியில் வீடு கட்ட பிளான் அப்ரூவல் கட்டணமும் உயர்த்திவிட்டனர். மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தாருங்கள் என பேசினார்.

எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணி,வீரமணி,மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக வேலூரில் விவசாயிகள் சங்கத்தினர் வணிகர் சங்க அமைப்பினர் ஆகியோர்கள் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனுக்களை வழங்கினார்கள்

admin
