யாருடன் செல்போனில் பேசினாய்! கள்ளக்காதலியை கொன்ற கிளீனர்!
ஆர்.ரமேஷ்,
அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த கள்ளக் காதலியை லாரி கிளீனர் அடித்து கொன்றுள்ளார்.
திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40). இவர், தனியார் கழிவு நீர் அகற்றும் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து இளங்கோவன் தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் தங்கி இருந்த மாது (35) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம்
கள்ளக்காதலாக மாறியது.
அப்படியிருக்க அந்த பெண்ணை, இளங்கோவன் தான் குடியிருக்கும் வீட்டுக்கு அழைத்து சென்று அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
இருப்பினும் மாது அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் வேறு ஒருவரிடம் பேசி வந்துள்ளார். இதனால் இளங்கோவன் ஆத்திரம் அடைந்தார்.
இதனால் மாதுவுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக நினைத்த இளங்கோவன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 26-ந் தேதி இரவு மாதுவை வீட்டிற்கு இளங்கோவன் அழைத்து சென்று தனிமையில் இருந்தார். அதன்பின்னர் செல்போனில் யாரிடம் பேசுகிறாய்? என கேட்டு தகராறு செய்தார்.
உச்சகட்ட ஆத்திரமடைந்த இளங்கோவன், வீட்டில் வைத்திருந்த சிறிய குழவிக்கல்லை எடுத்து மாதுவின் முகத்தில் பலமுறை குத்தி, வாய், மூக்கு மற்றும் பற்களை உடைத்தார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி, தரையில் விழுந்த மாதுவை அப்படியே விட்டுவிட்டு இளங்கோவன் தப்பித்துவிட்டார்.
பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது மூச்சு, இல்லாமல் மாது கிடந்தார். இதனையடுத்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு முகம் சிதைந்த நிலையில் மாதுவை கண்ட டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாதுவை பரிசோதனை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து இளங்கோவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், மாது செல்போனில் நீண்ட நேரம் வேறு ஒருவருடன் பேசியதால் அவரை குழவிக்கல்லால் முகத்தை தாக்கி சிதைத்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டாராம்.
போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்தனர்.

admin
