விஜய் கட்சியின் மாநாடு தேதி விரைவில் அறிவிப்பு!

விஜய் கட்சியின் மாநாடு தேதி விரைவில் அறிவிப்பு!

ம.பா.கெஜராஜ்,

 நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கிறார். ஆனாலும் தனது அரசியல் பணியை தொடங்கவேயில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அவர் வாய்ஸ் கொடுப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம்.

ஆனால் 2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு என அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

 இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் நடந்து வருகிறது. இதுவரை புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியிருப்பதாக தெரிகிறது.

  விஜய் தற்போது 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்துக்காக கடந்த சில நாட்களாக மயிலாப்பூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் விஜய் டப்பிங் பேசி முடித்துள்ளார்.  அப்படியிருக்க நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன்  4தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறாது.

  அடுத்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அன்று கட்சியின் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது பிறந்தநாள் அன்று அல்லது மற்றொரு நாளில் மாநாடு நடக்கும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.