வாணியம்பாடி சாரதி- ஆர்த்தி திருமணம்..அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி நேரில் வாழ்த்து!

 ம.பா.கெஜராஜ்,

   திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, தெய்வத்திருவாளர்கள், வஜ்ஜிரவேல் - பட்டம்மாள் அவர்களின் மகன் வழி பேரனும் தெய்வத்திருவாளர்கள். வி.ராஜவேலு - மனோரஞ்சிதம் அவர்களின் மகள் வழி பேரனும் தெய்வத்திரு. சிவாஜிகணேசன் - திருமதி. உமாபாய்சிவாஜிகணேசன் அவர்களின் இளைய குமாரனுமான திருநிறைச்செல்வன்

வி.எஸ்.சாரதி குமாருக்கும், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், எலவம்பட்டி கிராமம், நாச்சம்பட்டி, தெய்வத்திரு. சுந்தரம் - திருமதி.மரகதவள்ளி அவர்களின் மகன் வழி பேத்தியும் சேலம், தும்பிப்பாடி. கோவிந்தசாமி - திருமதி. சாந்தா அவர்களின் மகள் வழி பேத்தியும்

சேலம், திரு.கண்ணன்பிரபு - திருமதி. நி.வனிதா அவர்களின் குமார்த்தியுமான எஸ்.கே.ஆர்த்திக்கும்  பெரியோர்களால் நிச்சயித்தவண்ணம் திருமணம் நடைபெற்றது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள காஞ்சனா மஹாலில் சிறப்பாக நடைபெற்ற இத்திருமணத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு மற்றும் ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

  அவ்வண்ணமே சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் என பெருமளவில் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

   மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமணத்துக்கு வந்திருந்த சீனியர் ஜெர்னலிஸ்டுகள் மணமக்களை வாழ்த்தினர்.