பிரதமரின் காலில் விழ முயன்ற வானதி! விரல் நீட்டி எச்சரித்த மோடி!

ஜி.சாந்தகுமார்,
பிரதமரின் காலில் விழ முயன்ற வானதி சீனிவாசனை விரல் நீட்டி எச்சரித்தார் மோடி. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து பாஜகவினர் அதை பெரிய அளவில் வெளிப்படுத்திக் கொள்ள முயன்று வருகிறார்கள்.
அந்த வகையில் பாஜக மகளிர் அணி சார்பாக நேற்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஒரு பாராட்டு கூட்டம் நடத்தினர்.
அந்தக் கூட்டத்திற்கு பிரதம மந்திரி நரேந்திர மோடி வந்திருந்தார்..
அவரை வரவேற்பதற்காக நாடு முழுவதும் இருந்து முக்கிய பாஜக பெண்மணிகள் அங்கு குழுமியிருந்தனர்.
அதில் நம்ம தமிழ்நாட்டு எம்எல்ஏ வானதி சீனிவாசனும் ஒருவர்.
நிகழ்ச்சிக்கு வந்த பிரதமருக்கு பூமாலை கொடுத்த வானதி திடீரென்று மோடியின் காலில் விழுந்தார்.
இதனால் கடுகுடுத்த பிரதம மந்திரி நான்கடி தூர விலகிச் சென்று விரலை உயர்த்திக்காட்டி வானதி சீனிவாசனை கடுமையாக எச்சரித்துவிட்டு இறுகிய முகத்துடன் அங்கிருந்து அகன்று சென்றார்.
அதன் பின்னர் மேடை ஏறிய அவருக்கு மகளிர் அணி வீரர்கள் சால்வையும் மாலையும் அணிவித்தனா.¢ அப்போது பிரதமர் மோடியின் காலில் மகளிர் அணியினர் விழ முயற்சித்த போது பதிலுக்கு பிரதமரும் காலில் விழ முன்வந்து அதிர வைத்தார்.
காலில் விழும் சமாச்சாரத்தை தலைவர்கள் விரும்பாவிட்டாலும் தொண்டர்கள் திரும்பி இதை செய்கிறார்கள்.
இந்நிலையில் நான் பிரதமரிடம் ஆசீர்வாதம் பெறவே அவர் காலில் விழுந்தேன் என்று வானதி சீனிவாசன் சமாளித்திருக்கிறார்.