பக்கத்து வீட்டில் புகுந்த மேஸ்திரி!

பக்கத்து வீட்டில் புகுந்த மேஸ்திரி!

 க.பாலகுரு,

 திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு.

  திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(47). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டார் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர்களது 16 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

 இதை அறிந்து அவர்களது வீட்டிற்குள் நுழைந்த சரவணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிறுமி கூச்சலிட அங்கிருந்து சரவணன் தப்பித்து ஓடியுள்ளார். இதையடுத்து சிறுமி பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்ததன் பேரில், அவர்கள் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சரவணனை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.