அதிகாலை தண்ணீர் சப்ளை செய்த மாநகராட்சி:- இளைஞர் உயிரிழப்பு!

அதிகாலை தண்ணீர் சப்ளை செய்த மாநகராட்சி:- இளைஞர் உயிரிழப்பு!

  கு.அசோக்,

வேலூர்மாவட்டம்,வேலூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையில் உள்ள முள்ளிப்பாளையம், முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் 21. அவர் மின்சாரம் தாக்கி  இளைஞர் உயிரிழந்தார்.

 அதிகாலை மாநகராட்சி  தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதால் மின் மோட்டார் மூலம் தண்ணீர் தேக்க தொட்டிற்கு ஏற்றப்பட்டுள்ளது.

  அப்போது சக்திவேல் குளித்துவிட்டு மோட்டார் நிறுத்துவதற்காக சென்றபோது  மோட்டருக்கு செல்லும் அறுந்து கிடந்த ஓயரை தவறுதலாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து மோட்டர் மேல் விழுந்துள்ளார்.    

  பின்பு நீண்ட நேரமாகியும் குளிக்க சென்றவர் வீட்டினுள் வராததால் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது தெரிய வந்தது.

  பின்பு அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது அவர் ஏற்கனவே  உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வடக்கு காவல்துறையினா வழக்கு பதிவு செய்து¢ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இது குறித்து அப்பகுதிவாசிகள் தெரிவிக்கையில், இங்கு தண்ணீர் தட்டுபாடு உள்ளது. ஏபோதாவதுதான் தண்ணீர் விடுவாங்க. அப்ப நாங்க பிடிச்சி நிரப்பிக்கொள்ளவேண்டும். இந்த சம்பவம் கூட பாருங்க அதிகாலையில் தண்ணீர் விநீயோகம் செய்ததாலேயே  ஏற்பட்டது.

  இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தான் பொறுப்பு. அவர்கள் செய்த தவறு சின்ன பையன் அநியாயமாக இறந்துவிட்டான் என்று சொல்லி கண்கலங்குகிறார்கள்.