பாலாறு - சதுப்பேரி கால்வாயை ஆட்டையை போடும் திமுக பிரமுகர்! கையை பிசையும் அதிகாரிகள்!

பாலாறு - சதுப்பேரி கால்வாயை ஆட்டையை போடும் திமுக பிரமுகர்! கையை பிசையும் அதிகாரிகள்!

 ஜி.கே.சேகரன்,

 மேல்மொனவூர் ஊராட்சிக்குட்பட்ட சுடுகாடு 40 செண்ட் நிலமும் மற்றும் ஆற்றிலிருந்து சதுப்பேரி நீர் வரத்து கால்வாயை துத்து அவர் சாலை அமைப்பு பல கோடி அரசு நிலத்தை ஒப்பந்ததாரர் அபகரிக்கிறார் கிராம மக்கள் குற்றச்சாட்டு அதிகாரிகள் துணை போவதாகவும் தகவல்.

  வேலூர்மாவட்டம், வேலூர் அருகே மேல்மொனவூர் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியில் சுடுகாடுக்கு என இடம் (அக்காலத்தில் குழந்தைகள் சுடுகாடு) உள்ளது. அதன் பக்கத்திலேயே  சீனு என்பவர்  வீட்டு மனை வாங்கியுள்ளார். அவர் திமுகவைச் சேர்ந்தவராம்.

 அப்படியிருக்க அவர் சுடுகாட்டிற்கு சொந்தமான சுமார் 40 செண்ட் நிலத்தை தன்னுடைய இடம் என்று வளைத்துப் போட்டுக்கொண்டாராம். அதுமட்டுமின்றி சீனு கடந்த சிலநாட்களாக ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் சுடுகாட்டை நிரவி சுத்தம் செய்து அவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

  மேலும் அவர் கட்டிடத்திற்கு பாதை அமைப்பதற்காக பாலாற்றிலிருந்து சதுப்பேரி ஏரிக்கு  செல்லும் கால்வாயை ஆட்டையை போட்டுள்ளார்.

 இதனால் நீர் வரத்து கால்வாய் பாதி  மூடப்பட்டுவிட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் சீனுவிடம் நியாயம் கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுகிறாராம்.  அரசுக்கு சொந்தமான சுடுகாடு மற்றும் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புக்கு வருவாய்த் துறையினரே துணை போகின்றனர்.    எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு பல கோடி மதிப்புள்ள அரசு சொத்தை மீட்பதுடன் நீர் வரத்து கால்வாய்யையும் மீட்க வேண்டுமென பொதுமக்கள் கோருகின்றனர்

 நீர்வரத்து பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனே அகற்ற வேண்டுமெனவும் அதற்கு எந்த தடையுமில்லை என நீதிமன்றம் உத்தவிட்டுள்ள நிலையிலும்  30 அடி கால்வாயை தனி நபர் பாதியாக அக்கிரமிப்பு செய்துள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவே உடனடியாக அதனை அகற்ற வேண்டும் இல்லையேல் விவசாயிகள் கிராம மக்கள் ஒன்றினைந்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.