இன்னமும் செம்மரக்கட்டை கடத்தல்!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 7 லட்சம் மதிப்பிலான 300 கிலோ செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல். இளைஞர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வழியாக ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வாணியம்பாடி நகர காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் காரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அந்த காரில் செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த ஜமுனமரத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) என்பவரை கைது செய்ததுடன், காரில் இருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 300 கிலோ எடையுள்ள 8 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்ட்டது.

admin
