மாதம் ரூ.70,000/- வரை சம்பளம்! எஸ்.சி./எஸ்.டி.யினருக்கு வாய்ப்பு!கலெக்டர் தகவல்!

மாதம் ரூ.70,000/- வரை சம்பளம்! எஸ்.சி./எஸ்.டி.யினருக்கு வாய்ப்பு!கலெக்டர் தகவல்!

 ம.பா.கெஜராஜ்,

 தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் டீ.ளுஉ B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு சேர்ந்துபடித்திடவும் படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பபிற்கு வழி வகை செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது iso9001 -2015 தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

Amercian Council of Businessஆல் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

; mq;fpfupf;fg ; gl;Ls ; sJ. France ehl;by; cs;s- Lycee Nicolas Appert Cateringநிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

Hotel Management Institute Survey 2022- ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2வது இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13 வது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

    இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு B.Sc. (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு, ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு ( Diploma Food Production) பட்டயப் படிப்பு மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் (Craftmanship Course in Food Production & Patisserie) படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன் நட்சத்திரவிடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும்.

   இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிராண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

  B.sc. (Hospitality & Hotel Administrationமூன்று வருட முழு நேர பட்டபடிப்பு பயில யேவழையெட National Testing Agency மூலம் நடத்தப்படும் National Council For Hotel Management Joint Entrance Examination (NCHM JEE)  ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.    

  இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி ; Lk;. ,e;EioTj ; Nju;Tf;fhd gapw;rp Institute of Hotel Management Gatering Technology & Applied Nutrition நிறுவனத்தில் தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படும். (2023-2024 ஆம் ஆண்டிற்கு யேவழையெட National Testing Agency மூலம் நடத்தப்படும் NCHM JEEதேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27.04.2023 ) இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

  ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ. 50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.