தலித் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டுமாம்!

தலித் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டுமாம்!

ஜி.கே.சேகரன்,

  தலித் கிறிஸ்தவர் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளையும் பாதுகாப்பையும் வலியுறுத்தி   வேலூரில் கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் யேசுமரியான் தலைமையில் உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது.

  இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

 இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நீண்ட நெடிய காலமாகப் போராடி வரும் கிறிஸ்தவ தலித்தியர் மற்றும் இஸ்லாமிய தலித்தியர்களை ஒன்றிய அரசு பாகுபாடின்றித் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வேண்டும்,

 தனியார் நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும்,

அண்மைக் காலங்களில் மதச் சிறுபான்மையினர்மீது தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் நடத்தும் சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகள்மீது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்குப் போதிய பாதுகாப்பும் வழிபாட்டு உரிமைகளும் வழங்க வேண்டும் ஆணவப் படுகொலையைத் தடுக்கும்வண்ணம் மாநில அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

  சாதிய வன்கொடுமைகளுக்கு தலித்திய கிறிஸ்தவர்களும் உள்ளாக்கப்படுவதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இவர்களுக்கும் பொருந்தும் வண்ணம் ஒன்றிய அரசு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.

  மாநில அரசின் கீழ் உள்ள நிறுவனங்களிலும் திட்டங்களிலும் மத வேறுபாடின்றித் தலித்தியச் சமூகத்திலுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். தற்போது நடைபெறும் மனித இனத்திற்கு எதிரான அனைத்துப் போர்களைக் மூலம் தீர்வு கண்டிக்கிறோம். அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம்  தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.