என்னை "தல' என்று அழைக்க வேண்டாம்:- ஏ.கே.என அழைக்கலாம்...அஜித் வேண்டுகோள் !

என்னை "தல' என்று அழைக்க வேண்டாம்:- ஏ.கே.என அழைக்கலாம்...அஜித் வேண்டுகோள் !

  க.முகில்

  என்னை இனி தல என்று அழைக்கவேண்டாம் என்று நடிகர்அஜித் அறிக்கை மூலமாக அவருடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 பல்லாயிரம் ரசிகர்களைக் கொண்டவர் நடிகர் அஜித்.  அவரது நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது.

 அப்படியிருக்க  அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது.

  அந்த அறிக்கையில் கூறியதாவது ;

  இனி வரும் காலங்களில் என்னை பற்றி ஊடகங்களில் எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்றும் ,தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்றும் அஜித் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.