உரிமையாளரே தீயிட்டு கொளுத்திய ஓலா ஸ்கூட்டர்:-டாக்டரை வெறுப்பேற்றியதால் பரபரப்பு!
இம்மி,
ஓலா பேட்டரி ஸ்கூட்டர், அதன் உரிமையாளரை வெறுப்பேற்றிய நிலையில், அவர் அதை பெட்ரோல் ஊற்றி கொளு த்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மேலும் இந்த காட்சிகளை லைவ் ஆக வெளியிட்டு கோபத்தை போக்கிக் கொண்டிருக்கிறார் அந்த டாக்டர்.
இது குறித்த விவரம் வருமாறு,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பிசியோ தரப்பி மருத்துவராக உள்ளவர் பிரித்திவிராஜ். இவர் கடந்த ஜனவரி மாதம், பேட்டரியால் ஓடக்கூடிய ஓலா தயாரிப்பிலான ஸ்கூட்டரை ஒரு லட்சத்துக்கு ஆறு ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார்.
பெட்ரோலுக்கு மாற்று வழி என்பதாலும், ஓலா நிறுவன தயாரிப்பு என்றால் சர்வீஸ் எல்லாம் பக்காவாக இருக்கும் என்று நம்பி அந்த ஸ்கூட்டரை வாங்கினார்.
ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த ஸ்கூட்டர் பல இடங்களில் பாதி வழியிலேயே நின்று மக்கர் பண்ணி விட்டது.
இது குறித்து உரிமையாளர் பிரிதிவ் ஓலா கஸ்டமர் கேரில் புகார் சொல்வதுண்டு. ஆனால் அவர்கள் சரியாக ரெஸ்பான்ஸ் செய்யாமல் போகவே, மீண்டும் பாதி வழியில் நின்று காலை வாரியது பேட்டரி வண்டி. இதனால் டாக்டர் வெறுப்படைந்தார்.
இந்நிலையில் அதிகாரிகளின் இழுத்தடிப்பு காரணத்தால், அந்த வண்டி இன்னும் வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ) அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. .
அப்படியிருக்க இன்று அந்த ஸ்கூட்டரை குடியாத்தம் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு ஓட்டிச்சென்று பதிவு செய்ய கோரினார். அப்போது ஆதார் அட்டையை சோதித்த பிரேக் இன்ஸ்பெக்டர் இது ஆம்பூர் எல்லைக்குள் வருவதால் நீங்க ஆம்பூர் அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு கோடு போட்டு திருப்பி அனுபின்னார்.
மீண்டும் அவர் ஆம்பூர் திரும்பினார். அப்போது, காலை சுமார் 10.45.மணிக்கு உள்ளி என்கிற ஊர் அருகே ரிப்பேர் ஆகி வழக்கம் போல் அதன் மூச்சை நிறுத்திக் கொண்டது ஸ்கூட்டர்.
உடனே அவர் ஓலா கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டார். அவர்களோ நீங்களே எடுத்துட்டு வந்துடுங்க என்று சொல்லியிருக்கிறார்கள். ஏங்க உங்க தயாரிப்பு ரொம்ப மோசம் நீங்கதான் ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டும் என்று சொன்ன டாக்டரிடம், சரிங்க, மாலை ஐந்து மணிக்கு எங்க மெக்கானிக் வருவாங்க என்று சொல்லியுள்ளார்கள்.
இது ஸ்கூட்டர் உரிமையாளரான டாக்டரை மேலும் வெறுப்பேற்றியது.
அப்படின்னா நான் மாலை வரை இந்த நடுரோட்டில் நிற்கனுமா? இந்த வண்டி இருப்பதால் தானே இவ்வளவு தொல்லை வருகிறது என்று வேறு மாதிரி முடிவெடுத்த டாக்டர் தமது பேட்டரி ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தினார்.
மேலும் இந்த காட்சிகளை லைவாக ஓடவிட்டார். அதைப் பார்த்து டாக்டரை தொடர்பு கொண்ட போலிசார் அவரை மேலும் வெறுப்பேற்றவே, அய்யா என்னை ஆளை விடுங்க நான் இன்சூரன்ஸ் கூட கோரமாட்டேன் என்று சொல்லி தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
ஸ்கூட்டருக்கு ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்தால் 120 முதல் 180 கிலோமீட்டர் வரை போகும் என்று ஓலா நிறுவனம் கூறியதை நம்பி வண்டி வாங்கியவர் பட்டபாட்டை பார்த்து பேட்டரி பைக் வாங்கும் எண்ணம் இருந்தவர்கள் பேக் ஆகிவிட்டார்கள்.